காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு!
தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு18 இடங்களில் வெற்றிபெற்றது.
இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் யார் என்ற கேள்வி வலுவாக எதிரொலிக்க ஆரம்பித்தது
. செல்வப்பெருந்தகை, விஜயதாரணி, முனிரத்தினம் ஆகியோர் சட்டமன்ற குழுத் தலைவருக்கான போட்டியில் இருந்த நிலையில்
. இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில்:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக திரு @SPK_TNCC அவர்களும், துணைத் தலைவராக திரு @MLARajeshKumar அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 23, 2021
-தலைவர் திரு.@KS_Alagiri pic.twitter.com/2IBwRK4yya
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
துணைத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.
விசிக சார்பில் 2006ஆம் ஆண்டு மங்களூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.