மக்கள் மனங்களை யாராலும் ஏமாற்ற முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்
இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேரடி ஒளிபரப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில்,ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம்.
அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது, படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு சென்றது வருத்தமாக உள்ளது.
மாதம் 1000
1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள்; மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது; இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர். மக்களுக்கு நேரடியாக, தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

மக்கள் மனங்களை வென்றிருக்கிறோம்
மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை; தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்கள் மனங்களையும் வென்றிருக்கிறோம். இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது.
திராவிட மாடல் அரசாக திகழ்கிறது; மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை; இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன.
நீதிமன்றங்களில் அரசு உதவிட சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் ஒன்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளில் உறுதி ஆவணம்
தயாரித்தல், முக்கிய பிரச்சினைகள் சட்டக் கருத்தை வழங்குதல் மற்றும் அரசு தலைமை வழக்குரைஞர், கூடுதல்
வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு உதவுதல் ஆகிய சட்ட விவகாரங்களில் மீட்புப் பணிகள் துறை இயக்குநரகத்தில் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.