எங்களால் இந்தியாவுக்கு எந்த தொந்தரவும் வராது - தலிபான்கள்

india taliban
By Irumporai Aug 31, 2021 06:06 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியா முக்கியமான நாடு, அந்நாட்டிற்கு எங்களால் எந்த அச்சுறுத்தலும் இருக்காது என தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டில் இருந்த இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பிற நாட்டு மக்களும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் அவர்கள், எங்களால் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் என்பது அறவே இருக்காது என கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எங்கள் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து இணைந்து இருக்க விரும்புவதாகவும், எங்களுக்கு இரண்டாவது வீடு பாகிஸ்தான் தான். இரு நாட்டு எல்லைகள், மக்கள், மதம் என அதற்கான காரணங்கள் அதிகம் உள்ளது எனவும், அனைத்து நாடுகளுடனுமே நாங்கள் இணக்கமாக இருக்க தான் விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.