எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் - அமைச்சர் துரைமுருகன்

duraimuruan construction meghadadu
By Irumporai Dec 04, 2021 02:04 AM GMT
Report

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  நிருபர்களுக்கு . அப்போது அவர் கூறியதாவது:

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசுதான் கையில் எடுத்துள்ளது. அதனால் கர்நாடக அரசை சமாதானம் செய்வது மத்திய அரசை பொறுத்தது.

எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம். முல்லைப் பெரியாறு அணை 142 அடி எட்டியவுடன் பகல், இரவு என பாராமல் உடனடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் தண்ணீர் உயர்வதற்கு வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டு 100 தடுப்பணைகள் கட்டப்படும். நீர் நிலை ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்,இவ்வாறு அவர் கூறினார்.