வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம், ஆனால் ஹிந்தி வேண்டாம்- ஜோதிமணி எம்.பி ஆவேசம்

tamil hindi jyotimanimp
By Irumporai Oct 19, 2021 12:30 PM GMT
Report

நமது பெருமைமிகு வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம்.ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம் என  ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து உள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக நிலையில், பார்சல் குறித்து சோமேட்டோ சாட் பாக்சில் புகார் தெரிவிக்கலாம்.

அதற்குரிய ஆதாரத்தை நாம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பணத்தை ரீபண்ட் செய்வார்கள் அல்லது ஆர்டர் செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மீண்டும் கொடுப்பார்கள்.

அந்த வகையில்,விகாஷ் சோமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சாட் பாக்சில் புகார் தெரிவிக்க, அவருடன் பேசிய நபர் ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என சோமேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு விகாஷ் தமிழ்நாட்டில் சேவை வழங்கும்போது தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த சோமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று பதில் அளித்துள்ளார்.

இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், பலரும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் :

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும் இல்லை. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு.

இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி உண்டு அதுவே அந்தந்த மாநிலத்தின் தொப்புள்கொடி.அடையாளம்.

நமது அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம்.நமது பெருமைமிகு வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம்.ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம்.என பதிவிட்டுள்ளார்.