தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோனி தொடங்கிவைத்தார்.
தோனி தொடங்கிவைத்தார்
தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச அளவிலான வீரர்களை தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எம்.எஸ்.தோனி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினை, சின்னம் மற்றும் கருப்பொருள் பாடல் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் பிறகு பேசிய முதலமைச்சர் :
தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி; லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக விளங்குகிறார். சென்னையின் செல்லப் பிள்ளை எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தோனி சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அதனால் தான் இன்று அவர் விளம்பர தூதராக உள்ளார். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.