நேர்மையான அரசியல் வேண்டும் - உடைந்து போன அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai
By Thahir Mar 19, 2023 05:26 PM GMT
Report

பணமில்லாத நேர்மையான அரசியல் நடைபெற்றால் தான் தமிழகத்தில் மாற்றம் என்பது வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேர்மையான அரசியல் தேவை 

அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவலையடுத்து அண்ணாமலை இதற்கு விளக்கமளித்துள்ளார்.

We want honest politics - Annamalai

செய்தியாளர்களை சந்தித்த அவர், பணமில்லாத நேர்மையான அரசியல் நடைபெற்றால் தான் தமிழகத்தில் மாற்றம் என்பது வரும் என்ற நிலைக்கு தான் வந்துள்ளதாக கூறினார்.

மேலும் தனது நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடத்தில் தான் பேசி வருவதாகவும் தெரிவித்த அண்ணாமலை, கூட்டணி குறித்து நேரம் வரும்போது கட்சியின் தலைமை தெரிவிக்கும் என்று கூறினார்.

தனக்கு அரசியல் தேவையில்லை

நான் எந்த கட்சிக்கும், தலைவருக்கும் எதிரி கிடையாது, சில மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக என் கருத்துகளை தெரிவித்திருந்தேன்.

வரும் காலங்களில் தெளிவாக இது குறித்து தான் விளக்கம் அளிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். அரசியலில் இப்படித்தான் செல்லவேண்டும் என முடிவுக்கு வந்துவிட்டேன்,

எனது நிலையில் இருந்து மாற்றித்தான் அரசியல் செய்யவேண்டும் என்றால் தனக்கு அரசியல் தேவையில்லை என்று அண்ணாமலை மேலும் கூறினார்.