‘‘எங்க ஆட்கள் மேல கைவச்சா தாக்குதல் வேற மாதிரி இருக்கும் ’’ : ரஷ்யாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

joebiden UkraineCrisis RussiaUkraineCrisis
By Irumporai Feb 16, 2022 05:39 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. தற்போது அங்கு போர் மேகம் சூழ்ந்துள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன

இந்நிலையில் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், அதற்காக தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த சூழல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் : உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

நாங்கள் நேரடி போரை விரும்பவில்லை ஒரு வேளை உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .