கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் சேகர்பாபு

Minister sekar babu Covid 3rd wave
By Petchi Avudaiappan Jun 21, 2021 01:32 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுவீச்சில் தயாராக உள்ளதாக இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் தன்னார்வ அமைப்பு சார்பாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு ஆணையர் ககன்தீப் சிங்பேடி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

  அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, கொரோனாவை கட்டுபடுத்துவதில் சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் தூய்மை சென்னை திட்டம் மூலமாக ஒருவார காலத்தில் 200 மெட்ரிக் டன் குப்பையை அகற்றியுள்ளதாகவும், அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் முழு வீச்சில் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், 8 ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.