டாஸ்மாக் இயங்கும் நேரத்தை அரசு குறைக்கும் என நம்புகிறோம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை
டாஸ்மாக் மதுபான நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே இயங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நம்பிக்கை
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டாஸ்மாக் தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், டாஸ்மாக் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் 21வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்குவதை உறுதிப்படுத்துவது, மதுபான கடைகளில் மதுவின் தீமைகள் குறித்து விளம்பரங்கள் வைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பொதுமக்கள் நலன் கருதி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் டாஸ்மாக் இயங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். மேலும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்குவதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.