அதிகாரங்களை போராடித்தான் பெறவேண்டியுள்ளது- கமல்ஹாசன்

election kamalhasaan polotical
By Irumporai Sep 21, 2021 05:39 AM GMT
Report

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்.2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அந்நாளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,கிராம ஊராட்சிகளில் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து கிராம சபையை கூட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளமாக இது உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் :

"கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது",என்று பதிவிட்டுள்ளார்.