ராசி மேல் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது - உதயநிதி ஸ்டாலின் பேச்சால் ஷாக்கான அமைச்சர்

Udhayanidhi Stalin M. K. Stalin K. N. Nehru K. Ponmudy
By Thahir Aug 29, 2022 12:34 PM GMT
Report

நானாக இருக்கட்டும், கலைஞராக இருக்கட்டும், தலைவராக இருக்கட்டும் எங்களுக்கு ராசி மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று ( 28.08.2022) தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஐம்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Dmk

ராசி மேல நம்பிக்கை இல்ல

பின்னர் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த ஐம்பெரும்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஏனென்றால் தேர்தல் நேரத்திலே மணப்பாறை தொகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று மக்களின் கோரிக்கை தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது.

தேர்தலில் வென்ற பின் முதல்வர் தற்போது மணப்பாறைக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி கொடுத்துள்ளார். ஆகவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு உங்கள் முன்னாள் நின்று பேசுகின்றேன்.

இதே போல் நான் பெரியாரையோ, அண்ணாவையோ பார்த்ததில்லை. ஆனால் கலைஞரை பார்த்திருக்கின்றேன். இங்கு வந்திருந்தும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கப்படுகின்றது.

இந்த மூத்த முன்னோடிகளை நான் பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக பார்த்து மகிழ்கின்றேன். இந்த கழக வெற்றி என்பது உங்களால் தான் சாத்தியமானது. ஆகவே இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Udhayanidhi Stalin

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நீங்கள் ராசிகார் எப்ப மணப்பாறை வந்தாலும் மழையோடு வருவதாக கூறினார்கள் ஆனால் நானாக இருக்கட்டும், தலைவராக இருக்கட்டும் எங்களுக்கு ராசி மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாது. நான் மழையோடு வரவில்லை உங்களை பார்பதற்கு அன்போடு, பாசத்தோடு வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று ஷாக்கான நிலையில் புன்னகையை வெளிப்படுத்தினார்.

கழக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 5 வது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமைந்திருக்கின்றது. 2019 பாராளுமன்ற தேர்தல், அதன் பின் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் இப்படி அனைத்திலும் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது.

முதல்வர் உழைத்துக் கொண்டே இருக்கிறார்

நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக அனைவரும் பாராட்டும் படியான முதல்வராக நம் முதல்வர் உழைத்துக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடன் அமைச்சர்களும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

மணப்பாறை ஒன்றிய தி.மு.க அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இதை ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் தி.மு.க அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.