தாக்குதலை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை - உக்ரைன் விவகாரத்தில் அதிபர் புதின் கருத்து
ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைன் மீது தாக்குதல் நடப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்தது.
தொடர்ந்து அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ள நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதியாக அறிவித்தது.
இதற்கு பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவை காக்க உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். வணிக பிரதிநிதிகளுடனான தொலைக்காட்சி சந்திப்பின் போது பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.