நாங்களும் இந்தியா மாதிரி ஃப்ரெண்ட்ஸ் ஆக இருக்கிறோமே? அமெரிக்காவுக்கு தூதுவிடும் இம்ரான்கான்!

usa imrankhan
By Irumporai Jun 27, 2021 10:37 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியாவைப் போலவே அமெரிக்காவுடனும் உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அண்மையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்பேசிய அவர்.

தான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி இந்தியாவுடனான உறவை சீராக்க மேற்கொண்ட முயற்சி எந்த பலனையும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்

மேலும், கடந்த காலத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா போன்ற பிராந்திய நாடுகளை விட பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்ததாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் துரதிஷ்டவசமாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது ஏற்பட்ட உறவில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும், அதனை மீட்டெடுக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருப்பதைப் போலவே பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நாகரிகமான நட்பினை பாகிஸ்தான் விரும்புவ்தாக  கூறியுள்ளார்.