எங்க அப்பாவ காணோம்: வைரலாகும் அஷ்வின் மகளின் வீடியோ

daughter ashwin viralvideo
By Irumporai Sep 04, 2021 01:09 PM GMT
Report

இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிய போட்டியில், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் செல்லும்போது அணி வீரர்களின் குடும்பதினரும் உடன் செல்வது வழக்கம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர் அஷ்வினின் குடும்பத்தினரும் லண்டன் சென்றுள்ளனர்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று அஷ்வினின் மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், அஷ்வினை தேடிஎன கேப்ஷன் பதிவிட்டு பைனாக்குலரில் மைதானத்தை பார்த்து கொண்டிருந்த அவரது மகள், அஷ்வினை தேடிக்கொண்டிருக்கிறார் என்பது போல பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் அஷ்வின் இடம் பெறாதது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.