அகதிகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் நுழைவதை விரும்பவில்லை : ரஷ்ய அதிபர் புதின்!

russia afganistan Vladimir Putin taliban afghanmilitants
By Irumporai Aug 22, 2021 04:59 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அகதிகள் என்ற பெயரில் போராளிகள் நுழைவதை விரும்பவில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் தற்போது தாலிபான்அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இதுகுறித்து கூறுகையில்:

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ரஷ்யாவின் பாதுகாப்பை நேரடியாக பாதித்துள்ளதாக கூறினார்.

மேலும், .ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விசா அங்கீகாரம் உள்ள நிலையில், சில ஆப்கானிஸ்தான் குடிமக்கள், மத்திய ஆசிய நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்படுகின்றனர் .

இவ்வாறு அகதிகள்என்கிற பெயரில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத படைகளும் மத்திய ஆசிய நாடுகளுக்கு நுழைவதைத் தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீட்பு விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.