நடிகர் விஜய் (தளபதி) எங்களுக்கு வேண்டாம் - கொந்தளித்த ரசிகர்கள்

Vijay Chennai Tamil Nadu Police
By Thahir 2 மாதங்கள் முன்

சென்னையில் நடிகர் விஜயை காண குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாரிசு திரைப்படம் 

இயக்குநர் வம்பி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் நடிகர் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி 

இந்நிலையில் சென்னை எண்ணுாரில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அதில் நடிகர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

நடிகர் விஜய் (தளபதி) எங்களுக்கு வேண்டாம் - கொந்தளித்த ரசிகர்கள் | We Don T Want Actor Vijay Fans Are Upset

தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் பலரும் அவரை காண திரண்டனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

ஆத்திரமடைந்த ரசிகர்கள், நாங்கள் இவ்வளவு பண்றது எதற்கு, நாங்க தளபதியை காண தான். இப்படி பண்ணா எங்களுக்கு தளபதியே தேவையில்லை. சூர்யா, ரஜினி, வந்தா மட்டும் அவரது ரசிகர்களை அனுமதிக்கிறாங்க.ஆனால் விஜய் வந்தா மட்டும் இப்படி பண்றாங்க என்று புலம்பினர்.