ஐடி சோதனை பற்றி எங்களுக்கு தெரியாது - கரூர் எஸ்.பி சுந்தரவதனன் தகவல்..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ஐடி சோதனை குறித்து எந்த தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை என கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனன் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
இன்று காலை முதல் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கரூரில் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இச்சோதனை குறித்து அறிந்து வந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகரிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட எஸ்.பி தகவல்
மேலும் அவர்கள் வந்த காரும் தாக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனன் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து எந்த தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.
சோதனைக்கு வந்த அதிகாரிகளுடன் ஆர்பிஎஃப் வீரர்களும் வரவில்லை. கார் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார்.
கரூரில் 9 இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்