கொரோனா நெருக்கடியை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது - உச்சநீதிமன்றம்
இந்தியா முழுவதும் கொரோனா பேரிடர் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்புகளும் மரணங்களும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.
கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக இருந்திருக்கவில்லை எனக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் கொரோனா நெருக்கடி தொடர்பான வழக்குகள் அவசரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உயர்நீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளை உச்சநீதிமன்றம் தன்வசம் எடுத்துக் கொள்ளலாம் என கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடைவிதிக்கப் எனத் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். “உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பது தான் சரியாக இருக்கும். அவர்களுடைய அதிகாரத்தில் தடைவிதிக்க விரும்பவில்லை.
அதே சமயம் கொரோனா நெருக்கடியை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நாங்களும் தொடர்ந்து விசாரிப்போம்” என்றுள்ளது.