அதிமுகவைக் கொண்டு ஐபிஎல் போட்டியே நடத்தலாம் போல - அமைச்சர் உதயநிதி கிண்டல்
அதிமுகவைக் வைத்து ஐபிஎல் போட்டியே நடத்தலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி
ராயபேட்டையில் உள்ள திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது இருக்கும் அதிமுக கட்சியினை கொண்டு ஐ.பி.எல் போட்டியினையே நடத்தலாம் என தெரிவித்துள்ளார். காரணம் ஐ.பி,எல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் உள்ளன , அதே போல் அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா , தீபா ,டி.டி.வி தினகரன் எனக் கூறிய அமைச்சர் .
ஐபிஎல் போட்டி
தீபா அணியில் இரண்டு பிரிவுகள் உள்ளதாக கிண்டல் செய்தார் , தொடர்ந்து பேசிய உதயநிதி மருத்துவமனைக்கு நாம் சென்றால் மருத்துவர்கள் நமக்கு மருந்து எழுதி கொடுப்பார்கள் அதில் ஆகாரத்திற்கு முன், பின் என மருந்து கொடுப்பார்கள் .அதே போல் அதிமுகவுக்கும் பாஜகவினையும் இரண்டு வகையாக பிரிக்கலாம் அ.மு மற்றும் அ.பி (அமித்ஷாவுக்கு முன் அமித்ஷாவுக்கு பின்) என பிரிக்காலாம் என கூறினார்.
மேலும் எம்.ஜி ஆர் தனது தொண்டர்களை இரத்தத்தின் இரத்தங்களே என அன்புடன் அழைப்பார், ஆனால் தற்போது அதிமுகவின் இரத்தங்களை பாஜக அட்டை போல உறிஞ்சு விட்டதாக அமைச்சர் உதயநிதி கூறினார்.