மக்களிடம் சென்று நீதி கேட்க உள்ளோம் - ஓ.பன்னீர்செல்வம்
மக்கள் மன்றத்தை நாடி செல்ல உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்கள் மன்றத்தை நாட உள்ளோம்
தர்மயுத்தத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தர்மயுத்தத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாங்கள் யாருடைய பி டீமும் அல்ல, திமுகவின் A to Z டீம் அவர்கள் தான். உச்சநீதிமன்ற தீர்ப்பால் தங்களுக்கு எந்த விதமான பின்னடைவும் இல்லை நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? மக்களிடம் சென்று நீதி கேட்போம்.
எடப்பாடி பழனிசாமி தான் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக இபிஎஸ் தாத்தாவோ, ஓபிஎஸ் தாத்தாவோ ஆரம்பித்த கட்சி அல்ல. எம்ஜிஆர் தொடங்கிய கட்சி என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அவரின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் எதையும் கூறவில்லை. தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடமுடியாது.