பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு

Government of Tamil Nadu
By Thahir Nov 07, 2022 07:14 AM GMT
Report

கடந்த ஆண்டு பருவமழையின் போது தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ள தயார்

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதி இணைக்கும் வகையில் கட்டப்படும் ஸ்டீபன் சாலை மேம்பால பணியை ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த பாலத்திற்கான ஒப்பந்த பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி செய்யப்பட்டது.

இப்பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். மேம்பால பணிகள் 70% இருக்கும் இடையில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உறுதிப்படுத்த தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு பருவமழையின் போது தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை.

தற்போது தண்ணீர் தேங்கக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் மோட்டார் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த பருவமழை மக்களை பாதிக்காதவாறு சமாளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.