Monday, Mar 10, 2025

கோட்சே கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கமே இல்லை : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி

By Irumporai 2 years ago
Report

காரைக்குடியில் நேற்று அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அடிமை மனநிலை

மேலும், ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்தின் உதாரணமாக காட்டுவது சார்லஸ் டார்வினை பரிமாண வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையினை காட்டுவதாக தெரிவித்தார்.

கோட்சே கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கமே இல்லை : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி | We Are Proud To Be Inspiredideas Su Venkatesan Mp

ஆளுநரின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மதுரை எம்பி சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் , 

எங்களுக்கு பெருமை தான்

ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது.

புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான் என பதிவிட்டுள்ளார்.