சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் : கமல்ஹாசன்
மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹசன் அவர்கள் கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் ஒருபோதும் மதப்பிரிவினை ஏற்படுத்த முடியாது.
சென்னையில் ஜல்லிக்கட்டு
மத அரசியலை தடுக்க வேண்டும். ஒற்றுமை நிலை நாட்டும் வண்ணம் ராகுலின் யாத்திரை அமைந்துள்ளது. தலைமை பொறுப்பில் உள்ள நான் ஏ சொன்னால் நீங்களும் ஏ சொல்ல வேண்டும் என்னை பின்பற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜல்லிக்கட்டு நடந்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என தெரிவித்துள்ளார்.