இந்தி படிக்கணுமா .. அப்போ பானி பூரி விக்கிறவங்க யார் ? : அமைச்சர் பொன்முடி

By Irumporai May 13, 2022 06:42 AM GMT
Report

மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் அண்மையில் பேசியிருந்ததையடுத்து,இந்தி மொழி தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில்,தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள்,தாங்கள் இந்திக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல எனவும்,ஆனால்,இந்தி கட்டாயப்படுதப்படுவதைதான் எதிர்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,கோவை பாரதியார் பல்கலைக் கழகம் பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது: “தமிழகத்தை பொறுத்தவரை ஆண்களாக இருந்தாலும்,பெண்களாக இருந்தாலும் எல்லாரும் படிக்கவேண்டும் என்பதுதான் திராவிட மாடல் மற்றும் தந்தை பெரியார் மண்ணின் நோக்கம்.

 இந்தியாவிலேயே உயர்கல்வியில் 53% அளவில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. ஆனால்,இந்தி படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கிறதா?,இன்று கோவையில் பானிபூரி கடை நடத்துபர்கள் யார்?.

மாறாக, நானும்,இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனும் தமிழில் படித்து இந்த நிலைக்கு முன்னேறியுள்ளோம்.மேலும்,இரு மொழிக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.ஏனெனில்,சர்வதேச தொடர்புக்கு ஆங்கிலமும்,உள்ளூர் தொடர்புக்கு தமிழும் உள்ளது.

எனினும்,இந்திக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.ஆனால்,இந்தி கட்டாயப்படுதப்படுவதைதான் எதிர்க்கிறோம்.இதன்மூலம்,தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன்.மேலும்,புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார்”,என்று தெரிவித்துள்ளார்.