ஆபத்தான நிலையில் இருக்கிறோம் - கதறும் இலங்கை தமிழர்கள்

Tiruchirappalli
By Thahir 1 வாரம் முன்

நீதிமன்றத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கைதிகள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறப்பு முகாமில் சோதனை 

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், இந்தோனேசியா தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மத்திய புலனாய் அமைப்பை சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு (NIA) அதிகாரிகள் திடீர் சோதனயில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அமலாக்கப் பிரிவினரும் அதிரடி சோதனை ஈடுபட்டனர் .

இதனை அடுத்து திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, பாஸ்கர், அன்பு ஆகியோர் சிறப்பு முகாமில் அதிரடி சோதனை மேற்கொண்டு அங்கிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர்.

இதனை கண்டித்து சிறப்பு முகாம் கைதிகள் மரத்தில் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு உடனடியாக எங்கள் செல்போனை தர வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு செல்போன் தரப்படவில்லை.

இந்நிலையில் இன்று திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 12பேரை நீதிமன்றத்தில் அவர்கள் அஜர்படுத்துவதற்காக காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திடீர் தர்ணா போராட்டம் 

நீதிமன்றத்தில் காவல்துறை வேனில் இருந்து இறங்கி அவர்கள் திடீரென அங்கே உட்கார்ந்து மறியிலில் ஈடுபட்டதுடன் தங்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களிடம் பறித்த அனைத்து செல்போன்களையும் திரும்ப கொடுக்க வேண்டும் எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆபத்தான நிலையில் இருக்கிறோம் - கதறும் இலங்கை தமிழர்கள் | We Are In Danger Screaming Sri Lankan Tamils

தொடர்ந்து காவல்துறை அவர்களை அழைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன் நேர் நிறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்தா கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து காவல்துறையினர் மீண்டும் சிறப்பு முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

அப்பொழுது பத்திரிகையாளர்களை நோக்கி எங்களிடமிருந்து பறிமுதல் செய்த செல்போனில் தரப்படவில்லை.

ஆபத்தான நிலையில் இருக்கிறோம் - கதறும் இலங்கை தமிழர்கள் | We Are In Danger Screaming Sri Lankan Tamils

மேலும், விடுதலை செய்வதற்காக எங்களிடம் கியூப் பிரான்ச் பிரிவை சேர்ந்த சிவக்குமார், ஆஐ ரவி ஆகியோர் எங்களிடம் பணம் கேட்கிறார்கள். இதுபோல் ஏற்கனவே 21 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து எங்களிடம் பணம் கேட்டு வருகின்றனர்.

எனவே இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புது வழக்குகள் போட்டு எங்களை தொடர்ந்து ரிமாண்ட் செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.