பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்..! உடைகிறதா பாஜக - அதிமுக கூட்டணி?..பொன்னையன் பேச்சால் பரபரப்பு
வடநாட்டில் பாஜக என்னென் செய்தது என்பதை அறிந்துள்ளோம், பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம் என்றார்.
இபிஎஸ் - ஓபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு
பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளதாக பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே போன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். மேலும் பாஜக அந்த தொகுதியில் போட்டியிட்டால் தங்களது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாகவும் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பினரும் தனித்தனியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆறுதல் கோரியிருந்தனர்.
இதனிடையே அண்மையில் டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.


உடைகிறதா பாஜக - அதிமுக கூட்டணி?
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் செய்தியாளர் சந்திப்பின் போது, வடநாட்டில் பாஜக என்னென் செய்தது என்பதை அறிந்துள்ளோம், பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம் என்றார்.

மேலும் அவரிடம் செய்தியாளர்கள் கூட்டணியில் பாஜக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர், உள்ளாட்சித்தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிட்டதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதால் பாஜகவும் எங்கள் பக்கம் இருக்கலாம் அல்லவா, எங்களை விரும்பலாம் அல்லவா, எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா, பொறுத்திருந்து பாருங்கள் என பேசினார்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan