டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நாளை தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
சுழற்பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில்
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரீத் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் IBC Tamil
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம் IBC Tamil