தச்சராக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் தச்சராக மாறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான சேவியர் டோஹர்டி கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் 60 ஒரு நாள் போட்டிகள், 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் ஆடும் லெவனில் இடம் கிடைக்காததால் 2017 ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தார்.
அதன்பின் டோஹர்டி வர்ணனையாளராகவோ, பயிற்சியாளராகவோ மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தச்சராக மாறினார். இந்த தொழிலை ரசித்து செய்வதாகவும், இதில் புதிதாக கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் டோஹர்டி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.