142 ஆண்டுகளுக்கு பின் மண்ணுக்குள்ளிலிருந்து வெளியே வந்த அதிசய பாம்பு...! - வைரலாகும் புகைப்படம்...!

Snake
By Nandhini Oct 14, 2022 05:56 PM GMT
Report

வயநாடு மாவட்டத்தில் 142 ஆண்டுகளுக்கு பின் மண்ணுக்குள்ளிலிருந்து வெளியே வந்த அதிசய பாம்பால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. 

அதிசய பாம்பு 

வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரி அருகே பெம்பரமலை என்ற பகுதி இருக்கிறது. இந்த பெம்பரமலை கடல் மட்டத்திலிருந்து 1400 அடி உயரத்தில் இருக்கிறது.

இங்கு சில தொழிலாளர்கள் வனப்பகுதியில் மண்ணை தோண்டி கொண்டிருந்தனர். அப்போது மண்ணுக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பாம்பை பார்வையிட்டனர். அந்த பாம்பு தங்க நிறத்தில் ஜொலிஜொலித்ததால், இந்த வகை பாம்பு ஒரு அதிசய பாம்பு என்று கண்டறிந்தனர்.

இதனையடுத்து, இந்த பாம்பைப் பிடித்து வனத்துறையினர் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த பாம்பு குறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பாம்பு ‘தங்க கவசவாலன்’ என்ற வகையைச் சேர்ந்த பாம்பு என்றும், 142 ஆண்டுகளுக்கு பின்னர் வனப்பகுதியில் மண்ணுக்குளிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகையான பாம்பு 1880-ம் ஆண்டு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.     

snake Gold Armor