கேரள நிலச்சரிவு 106 பேர் பலி - தமிழக ஆளுநர் இரங்கல்!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 106 ஆக அதிகரித்துள்ள நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயநாடு
கேரள மாநிலம் வயநாடு ,மேப்படி, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது . இந்த கோரா சம்பவத்தில் 98 பேர் உயிரிழந்தனர் . 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் அங்கு மீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளது .
ஆளுநர் ஆர்.என்.ரவி
இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் , “கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே மிகப்பெரிய நிலச்சரிவுகளில் விலைமதிப்பற்ற உயிர்கள் பரிதாபகரமாக இழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.