நிலச்சரிவுக்கு 2 நாள் முன்பே எச்சரிக்கை விடப்பட்டது - காலநிலை ஆய்வாளர் பரபரப்பு தகவல்!
பேரிடர்களைத் தடுக்க முடியாது.ஆனால் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வாளர் ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு , சூரல்மலை மேப்பாடி,முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 161 ஆக உயர்ந்து வருகிறது.
இந்த கோர சம்பவத்தில் 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் - மண்ணில் புதைந்த 100'க்கும் மேற்பட்டோர் - 20 உடல்கள் மீட்பு!!
மேலும் உயிர்பலி அதிகரிக்கப்படும் என்ற அச்சமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் நிலச்சரிவு, இயற்கை பேரிடர் காலங்களில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வழிமுறைகள் குறித்து ற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வாளர் ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை..
வயநாடு பகுதியில் அதீத மழை பெய்தால் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நிலச்சரிவு, என்பது இயற்கை பேரிடர் என்பதால் அதைத் தடுக்க முடியாது; ஆனால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார். மேலும் நிலச்சரிவு நடப்பதற்கு 2 நாட்கள் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதீத மழை பெய்தபோதும் எச்சரிக்கை விடுத்தும் மக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. தொடர்ந்து முன்னெச்சரிக்கை கொடுத்தும் துரித கதியில் செயல்படவில்லை என தெரிவித்த அவர்,''மக்களை 2 நாட்களுக்கு முன்பே வெளியேற்றி இருக்க வேண்டும் என்று கூறினார்.
தற்பொழுது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக்குழு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் காலநிலை மாற்றங்களையும், அதன் பாதிப்புகளையும் தமிழ்நாடும், கேரளாவும் ஒன்றாகவே பகிர்ந்து கொள்வதால் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.