ரூ.5 கோடிக்கு வீடு, ரூ.1 கோடிக்கு தங்கம் - பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு தெரியுமா?
பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதிக்கு நவம்பர் மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சத்யன் மோக்கேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி. அவரது கணவரான ராபர்ட் வதேராவின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி.
தனக்கு எதிராக 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ரூ.12 கோடி சொத்தில், ரூ.4.24 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.7.74 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும் அடங்கும். ரூ.1.09 கோடி மதிப்பிலான சொத்தை வாங்கி அதன் கட்டுமானத்துக்கு ரூ.5.05 கோடி செலவு செய்தேன்.
சொத்து மதிப்பு
ரூ.15.75 லட்சம் கடன் உள்ளது. 2023-24 நிதியாண்டில் தனது ஆண்டு வருமானம் ரூ.46.39 லட்சமாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ரூ.47.21 லட்சம் சம்பாத்யம். ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த கார் கணவர் ராபர்ட் பரிசாக அளித்தது. இதுதவிர ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.29 லட்சம் மதிப்புள்ள வெள்ளியும் உள்ளது.
டெல்லியின் சுல்தான்பூர் மெஹ்ராலி கிராமத்தில் ரூ.2.10 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் . இந்த நிலத்தில் ராகுல் காந்திக்கும் பங்குள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் ரூ.5.63 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது.
மேலும், ரூ.2.24 கோடி மதிப்புள்ள மியூச்சுவல் பண்டு முதலீடுகள், எஸ்பிஐ வங்கியில் ரூ.17.38 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தற்போது வங்கிக் கணக்கில் சுமார் 3.60 லட்சம் ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.