உஷாரய்யா உஷார்ரு! - வாட்ஸ் ஆப்பில் பாசமாக பேசி, பணம் பறிக்கும் மோசடி கும்பல்
உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்டும் வாட்ஸ் ஆப், பயணர்களின் பாதுகாப்பினை கருதி பல பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தினாலும் , ஹேக்கர்களாளும் இணையவழி சூதாட்டக்காரர்களாளும் பாதிப்பு வரத்தான் செய்கிறது.
இந்த நிலையில் ,இங்கிலாந்தில் நடந்த சம்பவம்தான் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் இங்கிலாந்தை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் புது தந்திரத்தை பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பில் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது , வாட்ஸ் ஆப் சாட்டில் :“ஹலோ மாம்” “ஹலோ டாட்” என ஒரு குறிப்பிட்ட நபரை இலக்காக வைத்து அவர்களது பிள்ளைகள் குறுஞ்செய்தி அனுப்புவது போலவே அனுப்பி அடுத்த குறுஞ்செய்தியாக SOS என உதவிக்கு அழைக்கும் சிக்னல் குறிப்பை அனுப்பி பணம் கேட்கின்றனர்.
இதனை பார்க்கும் அந்த குறிப்பிட்ட நபர் தங்கள் பிள்ளைகள் தான் உதவி கேட்கிறார்கள் என நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றனர்.
இதுகுறித்து இங்கிலாந்தின் எக்ஸ்பிரஸ் யுகெ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், மோசடி கும்பல்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி சுமார் ஜிபிபி 50000 வரை பணம் பறித்துள்ளனர்.
அப்படி ஒருவரிடம் இருந்து மட்டும் பாதிக்கப்பட்டவரின் மகன் கேட்பது போல கேட்டு இங்கிலாந்து மதிப்பில் ஜிபிபி 3000 ஏமாற்றியுள்ளனர்.
மேலும் இந்த தந்திரமான முறையை இந்திய மோசடி கும்பல்களும் பயன்படுத்தி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடி செய்யும் நபர் ஒருவரை இலக்காக வைத்து அந்த நபருக்கு நெருக்கமானவர்கள் உதவி கேட்பது போல பணம் பறிக்க முடியும் என்பதால் மக்கள் இதுபோல வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர்.