பூமியை விட இருமடங்கு பெரியது.. தண்ணீர் இருக்கும் புதிய கிரகம் - NASA கண்டுபிடிப்பு!!
பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.
புதிய கிரகம்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.
நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி கண்டறிந்துள்ள இந்த கிரகத்தில், நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பூமிக்கு அருகில்
பூமியிலிருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதையும் நாசா கண்டறிந்துள்ளது.
இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாம்.
மேலும், இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடும்போது, இந்த கிரகம் பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.