தண்ணீர் பஞ்சம்; தத்தளிக்கும் மக்கள்..நீரை பயன்படுத்த கட்டுப்பாடு - ரூ.5,000 அபராதம்!
தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பஞ்சம்
கர்நாடகாவின் தலைநகரமான பெங்களுருவில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஐடி, தொழிநுட்ப நிறுவனங்கள் அணிவகுத்திருக்கும் தலைநகரில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழை நீர் குறைவாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் வரத்து இல்லாததால் கோடை காலத்தில் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
பெங்களூருவுக்கு வழக்கமாக வழங்கப்படும் அளவை விட குறைந்த அளவில் மட்டுமே காவிரி நீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
மக்களுக்கு காவிரி நீர் தற்போது 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை, குறைவான நீர் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
அபராதம்
இந்நிலையில், அடுக்குமாட்டி குடியிருப்பில் வசிக்கும் மக்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம், அங்குள்ள குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க கோரி நோட்டீஸ் வினியோகித்துள்ளனர்.
குடியிருப்புகளில் வசிப்போருக்கு 20 சதவீத அளவுக்கு தண்ணீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதனையடுத்து, சில குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தண்ணீரை செலவிடுகிறீர்களா என்று கண்காணிக்க பணியாளர்களை நியமித்துள்ளனர்.
மேலும், சிக்கனம் செய்யாமல் வீணாக்கும் நபர்களை கண்டறிந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சங்கங்கள் தீர்மானித்துள்ளது. ஏனெனில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை டேங்கர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.