பழனி குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

Tamil Nadu Palani
By mohanelango May 21, 2021 07:06 AM GMT
Report

பழனி குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குதிரையாறு அணையில் இருந்து வலது பிரதான கால்வாய் பாசனம், இடது பிரதான கால்வாய் நேரடி பாசனம் மற்றும் பழைய நேரடி ஆயக்கட்டு பாசனம் ஆகியவற்றின் பாசன வசதிக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பழனி குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு | Water Released From Kuthiraiyaru Dam In Dindigul

இன்று முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 31 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதன் மூலம் திண்டுக்கல் பற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4641.17 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், தேவைக்கேற்ப திறந்துவிடப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகp பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது