அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி - 200 பேர் பாதிப்பு
மாசடைந்த குடிநீரை பருகியதால் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் மாசுபாடு
மத்தியப் பிரதேசம் இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படும் நீரைப் பருகி 1400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர். நர்மதா ஆற்றங்கரையிலிருந்து குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை பருகியவர்களுக்கே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
10 பேர் பலி
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அவர், இந்தூர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரோஹித் சிசோனியா, தலைமைப் பொறியாளர் சஞ்சீவ் ஸ்ரீவத்சவா ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநகராட்சி ஆணையர் திலீப்குமார் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.