பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ
Water Metro Buckingham Canal : எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் இருந்த போதிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
சுமார் 1 கோடி பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிப்பதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து
இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் வெளியாகியுள்ளது. 467 மீட்டர் நீளம் கொண்ட பக்கிங்காம் கால்வாய் தமிழ்நாட்டில் 210 கி.மீ தூரம் பாய்கிறது.
இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ தூரத்துக்கு படகு போக்குவரத்து சேவையை தொடங்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
