சிறப்பான பார்மில் இருக்கும் வெங்கடேஷ் ஐயரை திணறடித்த லலித் யாதவ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Kolkata Knight Riders Lalit Yadav
By Anupriyamkumaresan Sep 28, 2021 01:40 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை தவர்க்க கடுமையாக போராடி வருகிறது. ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (39) மற்றும் ஷிகர் தவான் (24) நல்ல துவக்கம் கொடுத்தனர்.

துவக்க வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தவிட்ட போதிலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ரிஷப் பண்ட்டை (39 ரன்கள்) தவிர மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை கூட தாண்டாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி அணி வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக லோகி பெர்குசன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி அணியை விட பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது.

நிதிஷ் ராணாவை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் போட்டியின் 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி 98 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.