கழிவு நீர் கால்வாய்க்குள் புகுந்த ஒளிந்து கொண்ட திருடன்..போராடி மீட்டு கைது செய்த போலீசார்

Arrest Coimbatore Waste water canal
By Thahir Oct 07, 2021 05:33 AM GMT
Report

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் மீது அம்மாவட்ட காவல்நிலையங்களில் பல்வேறு திடுட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருட்டு வழக்கில் ஒன்றில் தேடப்பட்டு வந்த ஹக்கீம், நள்ளிரவில் ராஜாமில் ரோட்டில் சுற்றிக்கொண்டிருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் ஹக்கீமை சுற்றி வளைத்து, விசாரித்தபோது போலிஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி, கான்கிரீட் சிலாப்பிற்கு கீழ் ஓடிய சாக்கடை கால்வாய்க்குள் சென்று பதுங்கினார்.

கழிவு நீர் கால்வாய்க்குள் புகுந்த ஒளிந்து கொண்ட திருடன்..போராடி மீட்டு கைது செய்த  போலீசார் | Waste Water Canal Arrest Coimbatore

சுமார் 50 அடி தூரம் சாக்கடைக்குள் நீச்சலடித்து சென்று மறைந்து கொண்ட ஹக்கீமை, வெளியே வருமாறு போலிஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அழைத்தனர்.

ஆனால் ஹக்கீம் அங்கேயே பதுக்கிக்கொண்டதால், தீயணைப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து சாக்கடையின் மேல் மூடப்பட்டிருந்த கான்கிரீட் சிலாப்பினை டிரில் போட்டு உடைத்து அகற்றினர்.

சுமார் 2 மணிநேரம் போராடி சிலாப்பை உடைத்த பின்னர் சாக்கடைக்குள் பதுங்கியிருந்த ஹக்கீமை பிடித்து வெளியே கொண்டுவந்தனர்.

பின்னர் திருட்டு வழக்கில் ஒன்றில், ஹக்கீமை போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.