“என்ன ஆனாலும் ருதுராஜ் கெயிக்வாட்டை ஆட விடாதீங்க” - முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர்
ருதுராஜ் கெயிக்வாட்டை ப்ளேயிங் 11-இல் ஆடவிட கூடாது என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா ஆடி வருகிறது.
இதில் இரண்டு போட்டிகளை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் நாளை 3-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் தான் அணிக்குள் திடீரென குழப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்திய அணியின் பபுளில் இருந்து விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியுள்ளதால் 3-வது டி20-இல் பங்குபெற மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களின் இடத்தை யார் நிரப்புவர் என்ற குழப்பம் எழுந்த நிலையில் அனைவரின் கவனமும் ருதுராஜ் கெயிக்வாட் மீது திரும்பியுள்ளது.
நியூசிலாந்து தொடரில் கே.எல்.ராகுல் - ரோகித்தும் தென்னாப்பிரிக்க தொடரில் ராகுல் மற்றும் தவானும் ஜோடி சேர்ந்து இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால் இதிலும் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இஷான் கிஷானுக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
இதனால் ஒரு போட்டியிலாவது கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு தாருங்கள் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் என்ன ஆனாலும் 3வது டி20ல் ருதுராஜுக்கு வாய்ப்பு தரக்கூடாது என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர்,
“கெயிக்வாட் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு தருவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதனை வைத்து முடிவு செய்யவும் முடியாது.
தேவையின்றி வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு அவுட்டாக செய்வார்கள்.” என தெரிவித்துள்ளார்.