வாஷிங்டன்னை விட்டு வெளியேறுகிறார் டொனால்ட் டிரம்ப்
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவுக்கு முன்பு வாஷிங்டன்னை விட்டு வெளியேறுகிறார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழா வருகிற ஜனவரி 20ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் பல வன்முறைக்கு வித்திட்டதாக டொனால்ட் டிரம்ப் அவர்களை உடனடியாக பதவி விலகக் கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் டிரம்ப் அவரால் தற்போது வாஷிங்டன்னை விட்டு வெளியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் உடைமைகள் பல பெட்டிகளில் எடுத்துவைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிபா் டிரம்ப் வாஷிங்டனில் இருந்து வெளியேறி ஃபுளோரிடா மாகாணம், மாரலாகோவில் அவருக்குச் சொந்தமான விடுதிக்குச் செல்வாா் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா வாஷிங்டனில் ஜன.20 நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கப் போவதில்லை என்று டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிவிப்பு புதிய வன்முறைக்கு விடுத்த அழைப்பு என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறி, அவரது முகநூல் பக்கத்தை முடக்கியது.