பஞ்சாப் அணியின் மிக முக்கிய பிரபலம் விலகல் - திடீரென வெடித்த மோதலால் பரபரப்பு
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பங்கேற்கவுள்ள நிலையில் திடீரென வெடித்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இந்த சீசனுக்கான தங்களின் கேப்டனை இந்த ஏலத்தின் வாயிலாக தேர்வு செய்ய உள்ளது. இந்த ஏலத்தில் தரமான வீரர்களை கண்டறிந்து வாங்குவதற்காக அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகங்களும் பயிற்சியாளர்களும் மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பதவி விலகுவதாக அறிவித்தார்.அவர் தனது ட்விட்டர் பதிவில் இந்த வாய்ப்புக்காக நன்றி பஞ்சாப் கிங்ஸ். இந்தப் பணியை மகிழ்ச்சியாக செய்தேன். மேலும் ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட அனில் கும்ப்ளே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பை தனக்கே உரித்தான பாணியில் ஒரு மீம் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார். அதில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ள அவர் “நான் கிளம்புகிறேன். என்னை மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.