“இனி ஹர்திக்லாம் ஒன்னுமே இல்ல..இந்த பையன் போதும் டீம்முக்கு” - முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்

t20series wasinjaffervenkateshiyer hardikpandyavenkateshiyer
By Swetha Subash Feb 22, 2022 11:30 PM GMT
Report

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடம் இனி அவ்வளவு தான் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் முற்றிலுமாக வெற்றிப்பெற்று அசத்தியது.

இதில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியின் ஆல்ரவுண்டராக மாறி 3 டி20 போட்டிகளில் மொத்தமாக 92 ரன்களை அடித்து குவித்தார்.

ஒவ்வொரு 3.6 பந்துகளுக்கும் ஒரு பவுண்டரியை அடித்து விலாச அவரின் ஸ்ட்ரைக் ரேட் 184 ஆக எகிறியது.

“இனி ஹர்திக்லாம் ஒன்னுமே இல்ல..இந்த பையன் போதும் டீம்முக்கு” - முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் | Wasim Jaffer About Venkatesh Iyer T20 Series

இதில் கடைசி போட்டியில் மட்டும் 19 பந்துகளில் 35 ரன்களை அடித்து தெரிக்கவிடார் வெங்கடேஷ்.

பவுலிங்கை பொறுத்தவரையில் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் வீசிய 3.1-வது ஓவர்களில் மிக முக்கியமான விக்கெட்டை கைப்பற்றி அணிக்கு உதவினார்.

இதனால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் வகையில் இலங்கை தொடரிலும் பிசிசிஐ சேர்த்துள்ளது.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் வெங்கடேஷ் ஐயர் குறித்து, “இந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் தான் ஒரு படி மேல் இருக்கிறார்.

ஏனென்றால் பாண்டியா மீண்டும் எப்படி பவுலிங் வீசுவார், உடற்தகுதி என்னவென்பது தெரியாது, ஐபிஎல் தொடர் தான் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற பாண்டியாவுக்கு உதவும்.

ஆனால் தற்போதைய சூழலை பொறுத்தவரை வெங்கடேஷ் ஐயருக்கு தான் அதிக வாய்ப்புள்ளது. 6-வது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடியதை கண்டு ஆச்சரியப்பட்டேன். அவரை ஓப்பனிங் வீரராக பார்த்திருப்போம்.

ஆனால் தன்னை ஒரு ஃபினிஷராக மாற்றிக்கொண்டுள்ளது மிகச்சிறப்பான விஷயம். இதுமட்டுமல்லாமல் பவுலிங்கிலும் முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் உலகக்கோப்பையில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறார்” என தெரிவித்துள்ளார்.