இன்னும் ஜெயிக்கவே இல்லை அதற்குள் உங்களுக்கு கொண்டாட்டமா? - இந்தியர்களை எச்சரித்த வாசிம் அக்ரம்

Virat Kohli T20 India Vs Pakistan Wasim Akram
By Thahir Oct 24, 2021 12:29 PM GMT
Report

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இன்னும் இந்திய அணி இன்னும் வெல்லவே இல்லை, அதற்குள் இந்தியர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சாடியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

இரு அணிகளும் கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் மீண்டும் மோதுகின்றன என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி20மற்றும் 50ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறு தொடர்வதால் இன்றைய ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,உலகக் கோப்பைப்போட்டியில் இன்னும் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு முன்பாகவே இந்தியர்கள் பலர் கொண்டாடத் தொடங்கிவிட்டது தொடர்பான காணொலியைப் பார்த்து வாசிம் அக்ரம் கொந்தளித்துள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில் கூறுகையில் ' டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்னும் மோதவில்லை.

ஆனால், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் அதற்குள் போட்டியில் வென்றுதவிட்டதற்கான கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டதாக சில காணொலிகள் எனக்குக் கிடைத்துள்ளன.

நான் சொல்வதெல்லாம், கொண்டாடுங்கள் வேண்டாம் எனச் சொல்லவிலலை, ஆனால், இந்திய அணி வென்றபின் வெற்றிக் கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இந்தியர்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். நிச்சயமாக இந்த முறை பாகிஸ்தான் அணிதான் வெல்லப் போகிறது.

பாகிஸ்தான் அணி வென்றால் என்னுடைய நடனத்தை இந்தியர்கள் பார்ப்பீர்கள். பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் எப்போதுமே சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் அவர்களை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.

2018ம்ஆண்டு ஆசியக் கோப்பை, 2019ம்ஆ ண்டு உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளதை நினைவில் வைக்க வேண்டும்.

இந்திய அணியிடம் வலிமையான வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் தொடரந்து விளையாடி ஃபார்மில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் இந்திய வீரர்கள் ஸ்கோர் செய்ததில்லை, உலகில் பல நாடுகளில் நடந்த தொடர்களிலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்கள்.

ஆதலால், ரோஹித் சர்மா, கோலியிடம் எச்சரிக்கையாகஇருக்க வேண்டும். இருவரில் ஒருவர் நின்றுவிட்டால் மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி இந்திய அணிசென்றுவிடும் இவ்வாறு அக்ரம் தெரிவித்தார்