பேர் சொன்ன பிரச்னையாகிடும்..தினமும் 8 கிலோ கறி சாப்பிடுறாங்க.?கொந்தளித்த வாசிம் அக்ரம்!!
நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது தொடர்ந்து அந்நாட்டின் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
பாகிஸ்தான் அணி
ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தது. அப்போதிலிருந்தே இந்த ஆண்டிற்கான உலககொப்பியை வெல்ல தகுதியான அணியாக பாகிஸ்தான் இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
பெரிய அணியாக பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியை எளிதில் வெற்றி கொண்டது ஆப்கனிஸ்தான். முதலில் ஆடிய பாகிஸ்தான் 282 ரன்களை எடுக்க, பின்னர் களமிறங்கிய ஆப்கனிஸ்தான் அணி அந்த இலக்கை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்தது.
தினமும் 8 கிலோ கறி சாப்பிடுறாங்க
இதனால் அந்த அணி கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் தோல்வி மிகவும் சங்கடமாக இருந்தது என குறிப்பிட்டு, இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 280 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வது பெரிய விஷயம் என்றார். அங்கு மைதானம் எதுவும் ஈரமாக இல்லை என்றும் பாகிஸ்தான் கடந்த இரண்டு மூன்று வாரமாக சரியாக விளையாடவில்லை என்றார்.
இந்த விஷயத்தில் சம்பந்தமாக தனிப்பட்ட வீரர்களின் பெயர்களை எடுத்தால் அவர்களது முகம் வாடிவிடும் என பகிரங்கமாக சொன்ன வாசிம் அக்ரம், தினமும் 8 கிலோ ஆட்டு இறைச்சி சாப்பிடுவது போல் தெரிகிறது ஆனால் இவர்கள் அதனால்தான் பிட்னஸ் சோதனையை மறுக்கிறார்கள் என்றார்.