பூனைக்கு முடி வெட்ட 1.86 லட்சமா? முன்னாள் கிரிக்கெட் வீரர் சொன்ன தகவல்

Cricket Australia Pakistan national cricket team
By Karthikraja Nov 12, 2024 06:51 PM GMT
Report

பூனைக்கு முடி வெட்ட 1.86 லட்சம் செலவு செய்ததாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் வாசிம் அக்ரம். ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த முதல் வீரர் போன்ற சாதனைகளை படைத்துள்ளார். 

wasim akram

ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டி வர்ணனையின் போது தனது பூனை குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

பூனைக்கு ரூ.1.83 லட்சம்

அப்போது பேசிய அவர், "தனது பூனைக்கு முடி வெட்ட ஆஸ்திரேலியாவில் ஒரு கடைக்கு சென்றேன்.இதற்காக பாகிஸ்தான் பணம் ரூ. 1.83 லட்சம்(இந்திய மதிப்பில் ரூ. 55,000) செலுத்த வேண்டியது இருந்தது" என கூறினார்.

அப்போது சக வர்ணனையாளர்கள் நம்ப முடியாமல் வியந்த போது, உடனே பணம் செலுத்தியற்கான ரசீதை காண்பித்தார். 

wasim akram cat

 அதில்,' பூனையின் மருத்துவ பரிசோதனைக்கு ரூ. 20,000, மயக்க மருந்து செலவு ரூ. 56,000, இருதய துடிப்பு சோதனை ரூ.46,000, முடி வெட்டுவதற்கு ரூ. 7,300 என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலவு குறிப்பிடப்பட்டு இருந்தது. பூனைக்கு முடி வெட்டவே இவ்வளவு செலவாகுமா என செல்லப்பிராணிகள் பராமரிப்பில் உள்ள விலையுயர்வு குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.