எனக்கு உலக கோப்பையினை தவறவிட்டது ரொம்ப ஏமாற்றம்; வாஷிங்டன் சுந்தர் சொல்கிறார்

t20worldcup washingtonsundar
By Irumporai Feb 07, 2022 11:07 AM GMT
Report

உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்ததாக வாஷிங்டன் சுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள்போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வெற்றிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர் .

 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்ததாகவும் அடுத்த 15-16 மாதங்களில் வரும் உலகக் கோப்பை போட்டியில் கவனமாக இருந்து சிறந்த கிரிக்கெட் வீரராக தொடர விரும்புவதாக கூறினார்.

மேலும் அவ்வாறு செய்யும் போது, நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நான் நிகழ்காலத்தில் தங்கி விளையாட்டை ரசிக்க விரும்புகிறேன். எப்போதும் சவால்கள் இருக்கும், அதை நான் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் உணர்ந்து கொண்டேன்.

நான் விரும்பும் அம்சங்களை மேம்படுத்திக் கொண்டே என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். நான் இப்போது பவர்பிளேயில் பந்துவீசுவதை ரசிக்கிறேன். விஜய் ஹசாரே டிராபியில் விளையாடியது கூட, ஆட்டத்தின் வெவ்வேறு சூழ்நிலைகளில் பந்து வீச எனக்கு உதவியது. அங்கும் புதிய பந்தில் நிறைய பந்து வீசினேன்.

ஆகவே இந்த அனுபவங்கள் தனக்கு நிச்சயமாக உதவும் என வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.