இது என்ன புது சோதனை , வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா - இந்திய அணிக்கு அதிகரிக்கும் சிக்கல்
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், தென்னாப்ரிக்காவுடனான ஒரு நாள் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் அளிக்கிறது. அவருக்கு பதிலாக வேறு வீரர் களமிறக்கப்படுவாரா என்ற விவரத்தை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர்
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஜனவரி 19-ம் தேதி நடக்கும் ஒரு நாள் போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது.